"விஷ்ணுபுரம்" விருதைப் பெற்றார் எழுத்தாளர் சீ.முத்துசாமி

கோவை, டிசம்பர் 18

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் மலேசியத் தமிழ் எழுத்தாளரான சீ.முத்துசாமி அவர்களுக்கு "விஷ்ணுபுரம்-2017" விருது நேற்று கோவையில் வழங்கப்பட்டது.



தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டு கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் ஆண்டு தோறும் "விஷ்ணுபுரம்" விருது வழங்கப்பட்டு வருகிறது. 

 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இவ்விருதுடன், ரூ.1 லட்சமும் விருதை பெறுபவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான "விஷ்ணுபுரம்-2017" விருது மலேசிய தமிழ் இலக்கியவாதியும், எழுத்தாளருமான சீ.முத்துசாமி-க்கு வழங்கப்பட்டது. 

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் ஜெயமோகன், பி.ஏ.கிருஷ்ணன், ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் முத்துசாமி பேசியதாவது:- 

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நாடுவிட்டு நாடு சென்று அந்த நாட்டினை வளப்படுத்தி, இன்று வரை முறையான வாழ்க்கை அமைத்துக்கொள்ள முடியாமல் வாழும் மக்களின் சார்பில் இந்த விருதினை நான் பெற்றுக்கொள்கிறேன்.



அடிமை வாழ்க்கை வாழ்ந்த நேரத்திலும், மொழியினை விட்டுக்கொடுக்காமல் மலேசியத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு இனத்தின் மொழி அழிந்தால் அந்த இனத்தின் அடையாளமே அழியும். அதற்கு உதாரணம் மொரிசியஸ் மற்றும் இந்தோனேசியத் தமிழர்களின் அடையாளம் அழிந்ததே. எனவே எந்த சூழலிலும் மொழியை விட்டுக்கொடுக்க வேண்டாம். 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், "சீ.முத்துசாமி மலேசிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடி" என்ற புத்தகமும், "ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்" என்ற ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...